ஆளுமை:சுபித்திரா, கிருபாகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுபித்திரா
தந்தை மகாலிங்கம்
தாய் கனகேஸ்வரி
பிறப்பு 1956.10.30
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபித்திரா, கிருபாகரன் (1956.10.30) அனுராதபுரத்தில் பிறந்த கலைஞர். இவரது தந்தை மகாலிங்கம்; தாய் கனகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பில் கற்றார். ஆரம்பக் கல்வி கற்கும் போதே நடன கலாமணி ம.கைலாயபிள்ளை அவர்களிடம் நடனம் கற்றுக்கொண்டார். சிறுவயதில் மேடை நிகழ்வுகள் செய்து பாடசாலை போட்டிகளில் வெற்றியீட்டினார். தொடர்ந்து யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி கற்றார். அங்கு கீதாஞ்சலி வி.கே.நல்லையா அவர்களிடம் பரதம், கதகளி, குச்சுப்புடி நடனங்களை் கற்றார். தொடர்ந்து இந்தியா சென்று அடையார் லக்ஷ்மன் அவர்களிடம் டிப்ளோமா பட்டம் பெற்றார். 1979ஆம் ஆண்டு யாழ் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியில் தொண்டராசிரியராய் நடனம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது பாடசாலை தமிழ்த்தின போட்டிகளில் தனி நடனம், குழு நடனம், நாட்டிய நாடகம் போன்றவற்றை வெளிக்காட்டி நடன டிப்ளோமா ஆசிரியர் நியமனம் மட்டக்களப்பில் கிரான் மகாவித்தியாலயத்திற்கு கிடைக்கப்பெற்றது. மட்டக்களப்பு கடேற் போதனாசிரியர் கிருபாகரனை திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளாவார்.

மட்டக்களப்பு பரத கலாலயா என்னும் நடன கூடத்தை 1982இல் ஆரம்பித்தார். இவர் இடதுகை நட்டுவராவார். பரதகலாலயா என்ற நடன நிறுவனத்தை இலக்கம் 10 வீரசிங்கம் சதுக்கம், எல்லைவீதி மட்டக்களப்பில் 1982ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் 08.05.2008ஆம் ஆண்டு நிருத்தலாவண்யா எனும் நிகழ்ச்சியை வெகுவிமர்சையாகக் கொண்டாடியதுடன் கலாலய சாகரம் எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டது. இவரின் பரதகலாலயா பல நடனக் கலைஞர்களையும், நடன ஆசிரியர்களையும் உருவாக்கியுள்ளது. இவரிடம் நடனம் கற்ற மாணவிகள் கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ் போன்ற வெளிநாடுகளில் நடனக் கலை வகுப்புக்களை நடாத்துகின்றனர். வருடந்தோறும் பரதகலாலயம் மாணவர்கள் நடன நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடாத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடன ஆசிரியராக கடமை புரிந்தார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பிரம்ம ஸ்ரீ வீரமணி ஐயாிடம் பயிற்றப்பட்ட ஆசிரியராக 1987ஆம் ஆண்டு காலப் பகுதியில் வலம் வந்தார். பரதகலாலயா நிறுவனத்தில் நடனம் பயின்ற மாணவர்கள் மேல் படிப்பை முடித்து இன்று தலைசிறந்த நடன ஆசிரியர்களாகவும் கலை நிறுவனங்கள் நடாத்தும் கிளைகளை கொண்டு கலைத் தொண்டாற்றி வருகின்றனர். வீரகேசரி, தினக்கதிர், Global Express ஆகிய நாளிதழ்களில் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

விருதுகள்

பரத சூடாமணி

தேனக கலைச்சுடர்

நாட்டிய கலைமணி

ஜெயாஞ்சலி

நர்த்தன வித்தகி

நிருத்தியவாணி

நிருத்தியபேரொளி

இரத்தின தீபம் – காமினி பொன்சேகா ஞாபகார்த்தமாக.

கதிரவன் கலைக்கழகத்தின் கலைஞர் கௌரவம்.

கலாபூஷணம்

குறிப்பு : மேற்படி பதிவு சுபித்திரா, கிருபாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 6118 பக்கங்கள் 12-15

வெளி இணைப்புக்கள்