ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:19, 23 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்தி றபீக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி றபீக்கா
தந்தை முஹம்மது இஸ்மாயில்
தாய் குழந்தையம்மா
பிறப்பு 1980.04.01
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில் சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது இஸ்மாயில்; தாய் குழந்தையம்மா. ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும், உயர் நிலைக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.


1996ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்கு கவிதை எழுதியதன் ஊடாக இலக்கியத்துறையில் பிரவேசித்துள்ளார் இவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல் எழுதுதல் என பன்முகத்துறைகளைக் கொண்டவர். இருப்பு இதழ், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. வற்றாத ஈரம் எனும் தலைப்பில் இவரது கவிதை தொகுப்பொன்று வெளியாகியுள்ளது. தேனகம், படர்க்கைகளின் இணையம் போன்ற அமைப்புகளில் இலக்கிய செயற்பாட்டாளராக ஈடுபட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1598 பக்கங்கள் 100

வெளி இணைப்புக்கள்