ஆளுமை:வரதராசன், சண்முகம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 16 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | வரதராசன் |
தந்தை | சண்முகம் |
தாய் | சின்னத்தங்கம் |
பிறப்பு | 1924.07.01 |
இறப்பு | 2006.12.21 |
ஊர் | பொன்னாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர் பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.
இவரது முதல் சிறுகதை கல்யாணியின் காதல் எனும் தலைப்பில் ஈழகேசரியில் வெளியானது. தொடர்ந்து இவரது முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது. ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்களகும். மேலும் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்ன, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 01-25, 59-60
- நூலக எண்: 4428 பக்கங்கள் 410
- நூலக எண்: 15515 பக்கங்கள் 31-33
- நூலக எண்: 15514 பக்கங்கள் 133-139
- நூலக எண்: 16488 பக்கங்கள் 45-47
- நூலக எண்: 1024 பக்கங்கள் 02-03
- நூலக எண்: 1024 பக்கங்கள் 22-24
- நூலக எண்: 2043 பக்கங்கள் 23-32
- நூலக எண்: 2047 பக்கங்கள் 38-40