ஆளுமை:அப்துல் அசன், ஐதுரூஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அசன்
தந்தை ஐதுரூஸ்
பிறப்பு 1958.06.25
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் அசன், ஐதுரூஸ் (1958.06.25 - ) திருகோணமலையை சேர்ந்த எழுத்தாளர்;கவிஞர். இவரது தந்தை ஐதுரூஸ். இவர் கிண்ணியா அல் அக்‌ஷா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கம் இரவு எனும் தலைப்பில் 1972இல் தினபதி கவிதா மண்டலப் பகுதியில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து இளங்கவி ஹாசன், மதியன்பன், நவரசகவி, கலாவண்ணன், எழில்வாணன் ஆகிய புனைபெயர்களில் 38 சிறுகதைகளையும் 173 கவிதைகளையும் பல கட்டுரைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

நெஞ்சில் பூத்த மலர், பெரிய மனசு, பரீட்சைக் கட்டணம், அழியாத உண்மைகள், மனச்சுமைகள், தத்துப்பிள்ளை, மனத்துயரம் ஆகியன இவரது சிறுகதைகளில் சில. இவர் நெஞ்சில் மலர்ந்த கவிதைகள், வைகறைப்பூக்கள் ஆகிய இரு கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். அத்தோடு எல்லாம் நமக்காக, சீதனம் வேண்டுமா, வாங்க மாப்பிள்ளை வாங்க, நீதியின் இரு பக்கங்கள், இம்மையும் மறுமையும் ஆகிய நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 142-144