ஆளுமை:அன்பு முகைதீன், மு. இ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்பு முகையதீன்
பிறப்பு 1940.03.20
இறப்பு 2003.09.16
ஊர் கல்முனைக்குடி, மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்பு முகைதீன் (1940.03.20 - 2003.09.16) மட்டக்களப்பு, கல்முனைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர்; கவிஞர். 1960இல் கவிதைப் பிரவேசம் செய்த இவர் பலநூறு கவிதைகளை எழுதியுள்ளார். 1976இல் நபி வாழ்வில் நடந்த கதைகள், 1979இல் அண்ணல் நபி பிறந்தார், 1980இல் மாந்தருக்கு வாழ்வளித்த மகான், மாதுளம் முத்துக்கள், புதுப்புனல், உத்தம நபி வாழ்வில், எழுவான் கதிர்கள் முதலான கவிதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

1960 தொடங்கி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இணைந்து நாட்டார் காவியம், கவிநயம், மகரந்தம் முதலான நிகழ்வுகளை தொகுத்தளித்ததோடு பல சந்தர்ப்பங்களில் உரையாற்றியுமுள்ளார். இவரது கவிஆளுமைக்காக 1987ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் 'கவிச்சுடர்' விருதினைப் பெற்றுள்ளார் இவற்றுடன் கலாபூஷணம், ஆளுனர் விருதினையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 42-44
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 13-15