ஆளுமை:சிவஞானசுந்தரம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஞானசுந்தரம், செல்லத்துரை.
தந்தை செல்லத்துரை
பிறப்பு 30.03.1928
இறப்பு 2005.06.04
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.சிவஞானசுந்தரம் (1928.03.30 - 2005.06.04) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தையார் பெயர் செல்லத்துரை. இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வைத்தியக் கல்லூரி , லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்தவராவார். வி.செ.சி.பெனிசிலின், மகன், ஜெய்ஹிந்தசாஸ்திரி, நந்தி ஆகிய பெயர்களில் இவர் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். மருத்துவத்துறையில் இருந்தவாறே இலக்கியத்துறையை நேசித்த இந்தப் பெருமகன் இலங்கை இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனைப் படைத்த ஒருவராவார்.

இவரால் முதன் முதலில் எழுதப்பட்ட சஞ்சலமும் சந்தோஷமும் என்னும் சிறுகதை வீரகேசரியில் வெளியானதோடு மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களை மையமாகக் கொண்டு எழுதிய இவரது மலைக்கொழுந்து என்னும் நாவல் 1964ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுப் பெற்றது. அருமைத்தங்கைக்கு (மருத்துவ அறிவுரை), ஊர் நம்புமா (சிறுகதைத் தொகுப்பு), அன்புள்ள நந்தினி (மருத்துவ அறிவுரை), உங்களைப் பற்றி (சிறுவர் அறிவுரை), குரங்குகள் (நாடகம்), தங்கச்சியம்மா (நாவல்), கண்களுக்கு அப்பால் (சிறுகதைத் தொகுப்பு), நம்பிக்கைகள் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். இவருக்கு நந்தி எனும் பட்டப்பெயரை இந்திய அரசியல் வாதியும், எழுத்தாளருமான இராஜாஜி வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 144-145
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 40


வெளி இணைப்புக்கள்