ஆளுமை:திசைநாயகம், முருகேசர்
பெயர் | திசைநாயகம், மு. (காசிப்பிள்ளை) |
தந்தை | முருகேசர் |
பிறப்பு | 1857 |
ஊர் | காரைநகர் |
வகை | வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிரக்கிராசி காசிப்பிள்ளை என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டுவந்த முருகேசர் திசைநாயகம் அவர்கள் காரைநகரிலே தங்கோடை எனும் குறிச்சியில் 1857ம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞராவார். இவர் கொழும்பு றோயல் அக்கடமியில் கல்வி கற்று வந்த போது கோகலே மாணவர் உதவிப்பரிசை பெற்ற பெருமைக்குரியவர்.
அதன் பின்பு சட்டக்கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார். சட்டத்துறையில் தேறிய அவர் திரு டொன்ஹோல்ற் அவர்களிடம் நியாய நூல் சம்பந்தமான பயிற்சி பெற்ற பின் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமது தொழிலை நடாத்தி வந்தார்.
இவர் ஆசிய அறிவியல் வளர்ச்சிக் கழகம், வரலாற்றுக் கழகம் ஆகிய இரு சபைகளிலிம் அங்கத்துவம் பெற்றிருந்தார். தர்க்கம், இலக்கியம், சரித்திரம், வானசாஸ்திரம் ஆகியவற்றில் நிபுணராய் விளங்கியதோடு மட்டுமன்றி அவை சார்ந்த பல சங்கங்களிலும் அங்கத்தவராய் இருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 299-301