ஆளுமை:கோபாலபிள்ளை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோபாலபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலபிள்ளை, சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் பல வரலாற்றுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். புங்குடுதீவுக் கோவில்களின் வரலாற்றை இவரைப் போல வேறு எவரும் அதிகமாக எழுதவில்லை. அந்த அளவு புங்குடுதீவு கோவில்களின் வரலாற்றை பற்றி மிக அதிகமாக எழுதியுள்ளார்.

புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக நீண்ட காலம் சேவையாற்றிய இவர் கனடா சென்ற பின்பும் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவராக இருந்து அதன் சேவைக்கு உழைத்து வருகிறார்.

2003ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட பூவரசம் பொழுது என்ற ஆண்டு மலரில் கோயில்கள் பற்றிய கட்டுரைகளே மிக அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. புங்குடுதீவு கோவில்களின் வரலாறு எழுதப்படும் பொழுது இவரது கட்டுரைகளைப் பின்பற்றியே பலரும் கட்டுரைகளை எழுதுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 248B