ஆளுமை:கோபாலபிள்ளை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலபிள்ளை
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலபிள்ளை, சின்னத்தம்பி புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் பல வரலாற்றுக் கட்டுரைகளையும் புங்குடுதீவுக் கோவில்களின் வரலாறு பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக சேவையாற்றிய இவர், கனடா சென்ற பின்பும் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவராக இருந்து அதன் சேவைக்கு உழைத்து வருகின்றார்.

2003 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட பூவரசம் பொழுது என்ற ஆண்டு மலரில் கோயில்கள் பற்றிய கட்டுரைகளே மிக அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. புங்குடுதீவு கோவில்களின் வரலாறு எழுதப்படும் பொழுது இவரது கட்டுரைகளைப் பின்பற்றியே பலரும் கட்டுரைகளை எழுதுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 248B