ஆளுமை:பூராசா, சு. யோ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:24, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூராசா, சு. ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூராசா, சு. யோ.
பிறப்பு 1938
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.யோ.பூராசா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். 1959ல் ஆசிரியரான இவர் கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார். மற்றும் பராசக்தி வித்தியாசாலையை சங்கத்தார்கேணிக்கு இடம்மாற்றினார். அத்தோடு புங்குடுதீவு மேற்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம், இராஜேஸ்வரி வித்தியாலயம் என்பவற்றில் நூலகம் அமைக்க வழி செய்தார்.

1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் அதனை மேன்மையடையச் செய்யும் பொருட்டு எரிபொருள் நிரப்பு நிலையம். மக்கள் கடைகள், மக்கள் வங்கிக் கிளை என்பவற்றை நிறுவினார். 1980ஆம் ஆண்டு அந்தோனியார் தெய்வக் குழந்தைகள் இல்லம், வீரமாமுனிவர் கலை அரங்கு என்பவற்றை ஆலயக் காணியில் அமைத்து கொடுத்தார். தற்சமயம் புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக தாயகப்பற்றுள்ள மக்களின் ஆதரவோடும் யாழ் பல்கலைக்கழகத்தின் உதவியோடும் நிலக்கீழ் நீர் ஆய்வுப் பரிசோதனையை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 197
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பூராசா,_சு._யோ.&oldid=157339" இருந்து மீள்விக்கப்பட்டது