ஆளுமை:பூராசா, சு. யோ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூராசா
பிறப்பு 1938
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூராசா சு. யோ. (1938 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். 1959 இல் ஆசிரியரான இவர், கிராம வளர்ச்சிக்காகக் குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டதுடன் பராசக்தி வித்தியாசாலையைச் சங்கத்தார்கேணிக்கு இடம்மாற்றினார். இவர் புங்குடுதீவு மேற்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம், இராஜேஸ்வரி வித்தியாலயம் என்பவற்றில் நூலகம் அமைக்க வழி செய்தார்.

இவர் 1974 இல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அதனை மேன்மையடையச் செய்யும் பொருட்டு எரிபொருள் நிரப்பு நிலையம். மக்கள் கடைகள், மக்கள் வங்கிக் கிளை என்பவற்றை நிறுவினார். இவர் 1980 ஆம் ஆண்டு அந்தோனியார் தெய்வக் குழந்தைகள் இல்லம், வீரமாமுனிவர் கலை அரங்கு என்பவற்றை ஆலயக் காணியில் அமைத்துக் கொடுத்ததுடன் புங்குடுதீவின் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மக்களின் ஆதரவோடும் யாழ். பல்கலைக்கழக உதவியோடும் நிலக்கீழ் நீர் ஆய்வுப் பரிசோதனையை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 197
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பூராசா,_சு._யோ.&oldid=196320" இருந்து மீள்விக்கப்பட்டது