உதவி:பக்கங்களை நகர்த்தல்

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:46, 25 சூலை 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (உருவாக்கம்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இயற்றப்பட்ட ஒரு பக்கத்தை ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இருந்து இன்னொரு புதிய தலைப்புக்கு மாற்றுவதே பக்க நகர்த்தல் ஆகும்.

நகர்த்தும் முறை

நகர்த்த விரும்பும் பக்கத்தின் அடியில், நகர்த்துக என்னும் இணைப்பை அழுத்தினால் பக்கத்தை நகர்த்துவதற்கான தெரிவுகள் தோன்றும். அதில் புதிய தலைப்பையும், நகர்த்துவதற்கான காரணத்தையும் இட வேண்டும். இயல்பிருப்பாக தொடர்புடைய பேச்சுப்பக்கத்தை நகர்த்தவும், பக்கத்தை கவனிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். தேவையெனில் இவ்வியல்பிருப்பு தெரிவுகளை மாற்றவும்.

மாற்றுவதற்கு முன்னர் புதிய தலைப்பில் ஏதேனும் பக்கம் ஏற்கனவே உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். பின்னர் பக்கத்தை நகர்த்துக என்னும் பொத்தானை சொடுக்கினால், தக்க பக்க வரலாற்றுடன் பக்கம் நகர்த்தப்படும். பழைய தலைப்பும் புதிய தலைப்புக்கு வழிமாற்றம் செய்யப்படும்

இரட்டை வழிமாற்றிகள்

பக்கத்தை நகர்த்தும் போது இரட்டை வழிமாற்றங்கள் நகர்த்தப்படும் பக்கத்துக்கும் ஏறகனவே வழிமாற்றுப்பக்கங்கள் இருந்தால், அவை இரட்டை வழிமாற்றிகளாக ஆகிவிடும். ஆகவே, பக்கத்தை நகர்த்திய பிறகு, பழைய வழிமாற்றுப்பக்கங்களை நேரடியாக புதிய பக்கத்துக்கு வழிமாற்றி விடவும்.

இரட்டை வழிமற்றங்களின் பட்டியலை சிறப்பு:DoubleRedirects என்னும் சிறப்புப்பக்கத்தில் காணலாம்.

ஒரு பக்கத்துக்க்கான வழிமாற்றுப்பக்கங்களை காண, பக்கத்தின் அடியில் இப்பக்கத்தை இணைத்தவை என்னும் இணைப்பை சொடுக்கினால், அந்த பக்கத்திற்கு இணைப்பு கொடுத்துள்ள பிற பக்கங்கள் காண்பிக்கப்படும். அதில் வழிமாற்றுப்பக்கங்களையும் காணலாம்.