உதவி:பதிவேற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பக்கங்களில் படிமங்களையும், ஊடகங்களையும் உரைக்கு ஊடே இட்டு பயன்படுத்த, அக்கோப்புகளை பதிவேற்றம் செய்வது அவசியமாகும். கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கான நடைமுறைகள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன

கோப்பு நீட்சிகள்

படிமங்களுக்கான JPG, GIF, PNG, SVG போன்ற நீட்சிகள் கொண்ட கோப்புகளை மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். ஒலி/ஒளி ஊடக கோப்புகளுக்கு OGG போன்ற திறவு மூல நீட்சிகள் கொண்ட கோப்புகளை மட்டுமே பதிவேற்ற வேண்டும். இவை தவிர்த்து வேறு ஏதேனும் நீட்சியை கொண்ட கோப்பை பதிவேற்றினால் பிழை தோன்றும்

கோப்பு பதிவேற்றம்

கோப்பை இத்தளத்தில் பதிவேற்றம் செய்ய, பக்கத்தின் அடியில் கோப்பை பதிவேற்று என்னும் இணைப்பை சொடுக்க வேண்டும். இதை சொடுக்கினால் சிறப்பு:Upload என்னும் சிறப்பு பக்கத்திற்கு இட்டுச்செல்லும். பதிவேற்றம் செய்ய விரும்பும் கோப்பை தங்கள் கணினியில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, எந்த பெயரில் பதிவேற்றம் செய்ய விரும்பப்பப்படுகிறதோ அப்பெயரை Destination Filename என்பதில் இடவும்.

பிறகு சுருக்கத்தில், படிமம் எந்த உரிமத்தின் கீழ் பதிவேற்றப்படுகிறது மற்றும் படிமத்தை குறித்த கூடுதலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரிவிக்கவும்.

பக்கங்களை போலவே, கோப்புகளின் பழைய பதிப்புகளும் அப்படியே சேமிக்கப்படும். எனவே, தேவைப்படின் ஒரு கோப்பின் பழைய பதிப்பை மீட்க முடியும்.

பன்மடங்கு பதிவேற்றம்

ஒன்றுக்கும் மேற்பட்ட படிமங்களை பதிவேற்றம் செய்ய விரும்பினால் சிறப்பு:MultipleUpload என்ற சிறப்பு பக்கத்தை பயன்படுத்தவும். இதன் மூலம் பல கோப்புகளை ஒரே சமயத்தில் பதிவேற்ற இயலும். இதனால் பல முறை செய்ய வேண்டிய பணியை ஒரே நேரத்தில் செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

தெரிவுகள்

கோப்பு பதிவேற்றத்தின் போது கீழ்க்கண்ட தெரிவுகளை தெரிவு செய்யலாம்.

  • எச்சரிக்கைகளை புறக்கணி : இதை தெரிவு செய்வதன் மூலம் கோப்பு பதிவேற்றத்தின் போது கோப்பு மேலெழுதுதல் போன்ற எச்சரிக்கைகள் ஏதேனும் தோன்றின் அவை புறக்கணிக்கப்படும்
  • இப்பக்கத்தை கவனி: இக்கோப்பில் நிகழும் மாற்றங்களை கவனிக்க முடியும்
"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:பதிவேற்றம்&oldid=10144" இருந்து மீள்விக்கப்பட்டது