ஆளுமை:கோபாலசிங்கம், சீனித்தம்பி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கோபாலசிங்கம் |
தந்தை | சீனித்தம்பி |
பிறப்பு | 1945.11.07 |
ஊர் | வெல்லாவெளி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கோபாலசிங்கம், சீனித்தம்பி (1945.11.07 - ) வெல்லாவெளியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சீனித்தம்பி. வெல்லாவூர்க் கோபால், ஈழக்கவி என்ற புனைபெயர்களால் அறியப்படும் இவர், எனது கிராமம் கவிதையை வீரகேசரி பத்திரிகையில் எழுதியதன் மூலம் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்தவர். வீரகேசரி, தினமலர், தினபதி, சிந்தாமணி, சுதந்திரன், தேசியமுரசு, மல்லிகை, உதயம், தினகரன், தினமணி, நந்தன், ஆனந்தவிகடன், தாமரை, கிழக்கொளி ஆகிய பத்திரிகைகளில் 300 இற்கு மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் ’வெல்லாவெளிக் கிராமத்தின் வரலாறும் பண்பாடும்’ இவர் எழுதிய நூலாகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 435-436