ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:39, 20 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கபூர், எம். ஏ., ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கபூர்
தந்தை மதார் மொஹிதீன்
தாய் மீரா உம்மா
பிறப்பு 1935
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கபூர், மதார் மொஹிதீன் (1935 - ) மன்னாரைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், பட இயக்குனர். இவரது தந்தை மதார் மொஹிதீன்; தாய் மீரா உம்மா. இவர் மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அலஹார் முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் தமிழ் - ஆங்கிலமொழி மூலம் எஸ். எஸ். ஸி வரை பயின்றவர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான டி. வை. எம். சாமியைத் தனது குருவாகக் கொண்டு 125 இற்கும் மேற்பட்ட படங்களை இயற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 60-61
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 229-234