ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாலு முகையதீன் அப்துல் கபூர்
தந்தை மதார் மொஹிதீன்
தாய் மீரா உம்மா
பிறப்பு 1935
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாலு முகையதீன் அப்துல் கபூர், மதார் மொஹிதீன் (1935 - ) மன்னாரைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், பட இயக்குனர். இவரது தந்தை மதார் மொஹிதீன்; தாய் மீரா உம்மா. இவர் மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அலஹார் முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் தமிழ் - ஆங்கிலமொழி மூலம் எஸ். எஸ். ஸி வரை பயின்றவர். இவர் சிலோன் ஸ்டூடியோவில் சேர்ந்து கொண்டதன் பின்னர் சினிமா உலகில் தடம் பதித்தார்.

இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை, மஞ்சள் குங்குமம், நிர்மலா, டாக்ஸி டிரைவர், தெய்வம் தந்த வீடு (முதலாவது சினிமாஸ்கோப் கறுப்பு வெள்ளைப் படம்), நெஞ்சுக்கு நீதி, தென்றலும் புயலும் (இயக்குனர்), இரத்தத்தின் இரத்தமே போன்ற எட்டு தமிழ்ப் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான டி. வை. எம். சாமியைத் தனது குருவாகக் கொண்ட இவர், 125 இற்கும் மேற்பட்ட படங்களை இயற்றியுள்ளார். இவரது சாகரயதிலியை என்ற சிங்களத் திரைப்படம் வெற்றித் திரைப்படமாகும். இவர் வெலிக் அத்தர அலுத் இறக் (வெட்ட வெளியில் ஒரு புதுக் கோடு) என்ற ரூபவாகினி தொலைக்காட்சி நாடகத்தையும் ஒளிப்பதிவு செய்தார். இவர் எழுத்தாளர் ரஹ்மானின் சகோதரராவார்.

சரசவிய விருதை 3 முறை பெற்ற இவருக்கு முஸ்லீம் சமய கலாசார அமைச்சினால் 'முஸ்வ்வீர் மும்தாஜ்' பட்டம் வழங்கப்பட்டது. இவர் தீபஷிகா விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 60-61
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 229-234