ஆளுமை:சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரப் புலவர், கதிர்காமர்
தந்தை கதிர்காமர்
தாய் இலக்குமியம்மை
பிறப்பு 1876.06.28
இறப்பு 1953.07.10
ஊர் நவாலி
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்ட க. சோமசுந்தரப் புலவர் (1876.06.28 - 1953.07.10) யாழ்ப்பாணம் நவாலியைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமர்; தாய் இலக்குமியம்மை. ஆரம்பக் கல்வியை நவாலி அருணாசலம், கந்தநயினார் தம்பையா ஆகியோரிடத்திலும் ஆங்கிலக்கல்வியை மானிப்பாய் மாரிமுத்து ஆசிரியரிடமும் பயின்றார். இளமையிலேயே 'சைவ வாலிபர் சங்கம்' அமைத்து செயற்படுத்திவந்ததோடு சமய பாடங்களை கற்பித்தும் வந்தார். ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரை ஆசிரியப் பணியாற்றினார்.

சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய உயிரிளங்குமாரன் என்னும் ஒரு நாடகத்தினையும், இலங்கை வனம் எனும் நூலினையும் பல்லாயிரக்கணக்கான தனிப்பாடல்களையும் இவர் பாடி அளித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கென ஆடிப் பிறப்பு, ஆடு கதறியது முதலான படல்களையும், பனையின் வரலாறும் பயனும் பற்றித் தால விலாசம் என்னும் நூலும் இவரால் இயற்றப்பட்டுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 350 பக்கங்கள் 122-131
  • நூலக எண்: 10225 பக்கங்கள் 15-18
  • நூலக எண்: 963 பக்கங்கள் 143
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 183-197

வெளி இணைப்புக்கள்