ஆளுமை:விபுலாநந்தர், சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விபுலானந்தர், சாமித்தம்பி
தந்தை சாமித்தம்பி
தாய் கண்ணம்மா
பிறப்பு 1892.03.27
இறப்பு 1947.07.19
ஊர் காரைதீவு
வகை எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மயில்வாகனம் என்னும் இயற்பெயரைக் கொண்ட சா. விபுலானந்தர் (1892.03.27 - 1947.07.19) காரைத்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கல்வியியலாளர். இவரது தந்தை சமித்தம்பி; தாய் கண்ணம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்ற இவர் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் தோன்றி பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.

மதங்க சூளாமணி, யாழ்நூல், சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997) விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 209 பக்கங்கள் 65-67
  • நூலக எண்: 226 பக்கங்கள் 01-119
  • நூலக எண்: 336 பக்கங்கள் ii-xxiii
  • நூலக எண்: 3979 பக்கங்கள் 01-18
  • நூலக எண்: 5159 பக்கங்கள் 01-02
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 03-08
  • நூலக எண்: 963 பக்கங்கள் 198-205


வெளி இணைப்புக்கள்