ஆளுமை:விபுலாநந்தர், சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விபுலானந்தர்
தந்தை சாமித்தம்பி
தாய் கண்ணம்மா
பிறப்பு 1892.03.27
இறப்பு 1947.07.19
ஊர் காரைதீவு
வகை கல்வியியலாளர், இசை ஆய்வாளர், எழுத்தாளர்,
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விபுலாநந்தர் அடிகளார் என்று அறியப்படும் விபுலானந்தர், சாமித்தம்பி (1892.03.27 - 1947.07.19) மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த இசை ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் கண்ணம்மா. இவர் மயில்வாகனன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் கற்றுக் கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) பரீட்சையில் சித்தியடைந்தார்.

இவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். இவர் 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் சித்தியடைந்து பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே ஆவார்.

இவர் 1817 ஆம் ஆண்டு கல்முனை அரசினர் நுண்தொழிற்கல்லூரியில் இரசாயன உதவி ஆசிரியராகவும் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் இரசாயன சாத்திர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இக்காலத்தில் இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.சி பரீட்சையில் சித்தியெய்தினார். 1920 ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக்கல்லூரியில் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இக்காலத்தில் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கத்தின் மீளெழுச்சிக்காகப் பங்காற்றியதோடு நாளடைவில் சங்கத்தின் பண்டிதர் பரீட்சையின் பரீட்சகராகவும் கெளரவ உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இவர் 1922 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்துகொண்டதோடு 'இராமகிருஷ்ண விஜயம்' என்னும் தமிழ் மாதாந்த வெளியீட்டுக்கும் 'வேதாந்த கேசரி' என்னும் ஆங்கில மாத வெளியீட்டுக்கும் ஆசிரியராக விளங்கினார். செந்தமிழ், தமிழ்ப்பொழில் ஆகிய வெளியீடுகளில் கட்டுரைகளையும் எழுதிவந்தார். 1924 ஆம் ஆண்டு சித்திரை பெளர்ணமி தினத்தில் இராமகிருஷ்ண மடாலயங்களின் தலைவர் சர்வானந்தரால் பண்டிதர் மயில்வாகனன், சுவாமி விபுலானந்தர் என நாமம் சூட்டப்பட்டார். இவர் 14 ஆண்டுகளாக இசைத்துறையில் செய்து வந்த ஆய்வின் பயனாக 'யாழ் நூல்' என்னும் இசை ஆய்வு நூலை ஆக்கி 1947.06.05 இல் இந்தியா, திருக்கொள்ளம்பூதூர் திருக்கோயிலில் ஆளுடையபிள்ளை முன்னிலையில் அரங்கேற்றினார். இவற்றுடன் நாடகத் தமிழிற்காய் 'மதங்க சூளாமணி' என்னும் நூலையும் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய அமைப்புகள்

  • சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம் ரொறன்ரோ

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 209 பக்கங்கள் 65-67
  • நூலக எண்: 226 பக்கங்கள் 01-119
  • நூலக எண்: 336 பக்கங்கள் ii-xxiii
  • நூலக எண்: 3979 பக்கங்கள் 01-18
  • நூலக எண்: 5159 பக்கங்கள் 01-02
  • நூலக எண்: 10205 பக்கங்கள் 03-08
  • நூலக எண்: 963 பக்கங்கள் 198-205
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 233-258
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 06-08
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 116-124
  • நூலக எண்: 955 பக்கங்கள் 01-17