உதவி:கிரந்த எழுத்துரு/en
தங்களிடத்தில் சரியான கிரந்த எழுத்துருவும், தங்கள் உலாவியில் கிரந்தம் தெரிவதற்கான அமைவுகளும் இல்லாத நிலையில் இத்தளத்தில் இருக்கும் கிரந்த லிபி எழுத்துக்கள் வங்காளத்தை போன்றோ அல்லது சதுர சதுரமாகவோ தெரிய வரும்.
கிரந்தத்தை தங்கள் உலாவியில் சரியாக தெரிய வைப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்
Grantha Fonts
இத்தளம் இந்தோலிபி கிரந்த எழுத்துருவை (e-Grantamil & e-Grantha OT) பயன்படுத்துகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரந்தத்தைக்காண இவ்விரண்டு எழுத்துருக்களில் ஏதேனும் ஒன்று அவசியம் ஆகும்.
எனினும் e-Grantha OT எழுத்துருவின் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருப்பதால், கிரந்தத்துக்கு e-Grantamil எழுத்துரு பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்விரண்டு எழுத்துருக்களையும் கீழே தரவிறக்கிக்கொள்ளவும்:
- http://noolaham.org/Grantha/e-Grantamil.ttf (கிரந்தம் மற்றும் தமிழ்)
- http://noolaham.org/Grantha/e-GranthaOT.ttf (கிரந்தம் மட்டும்)
மேலும் Code2000 எழுத்துருவிலும் கிரந்த எழுத்துக்கள் Private Use Area பகுதியில் காணப்படுகின்றது. கிரந்த வலைவாசலில் உள்ள தலைப்பு படத்தில் உள்ள கிரந்த எழுத்துக்கள் இவ்வெழுத்துருக்கொண்டே இயற்றப்பட்டது
Browser Settings
கிரந்த எழுத்துமுறைக்கு இன்னும் யூனிகோடு குறியீடுகள் இல்லாததால், மேற்கூறிய இந்தோலிபி எழுத்துருக்களில் கிரந்தம் வங்காள எழுத்துமுறைக்குறிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதில். ஆகவே, பிரவுஸர் எழுத்துரு அமைப்புகள் மாற்றினால் மட்டுமே கிரந்த்தை சரியாக காண இயலும்.
கிரந்த எழுத்துக்கள் மிகவும் சிறியனவாக் தெரிவதாக கருதினால், வலைப்பக்கத்தை Zoom செய்து பெரிதாக்கிக்கொள்ளவும். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ் ஆகிய இரண்டிலும் Ctrl + + பெரிதாக்குவதற்கு், Ctr + -சிறிதாக்குவதற்கு.
Internet Explorer
- Tools --> Internet Options
- Internet Options Dialogue Box'ல் Font Tab'ஐ தேர்ந்தெடுக்கவும்
- Font Dialogue Box'ல் Language Script Drop Down Menu'ல் Bengali'ஐ தேர்ந்தெடுக்கவும்
- Web Page Font'இன் கீழ் - e-Grantamil அல்லது e-Grantha OT ஐ தேர்ந்தெடுக்கவும்.
- OK Click செய்து வெளியேறி Internet Options Dialogue Box'ல் மீண்டும் Ok Click செய்யவும்
Fire Fox
- Tools --> Options..
- At Options Dialogue Box'் Fonts & Colors Click Advanced
- At Fonts Dialogue Box'ல் Fonts For Select Bengali
- கீழே இருக்கும் அனைத்து Font பகுதிகளிலும் e-Grantamil அல்லது e-Grantha OT ஐ தேர்ந்தெடுக்கவும்.
- OK Click செய்து வெளியேறி, மீண்டும் Options Dialogue Box-ல் OK Click செய்யவும்.
ஒரு வேளை இதற்குப்பிறகும் கிரந்தம் வங்காளத்தைப்போன்றோ சதுர சதுரமாகவோ தெரிந்தால், மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி Tamil-க்கு e-Grantamil என்ற எழுத்துருவை தேர்ந்தெடுக்கவும்.
தமிழ் மற்றும் பெங்காலி இரண்டிற்கும் e-Grantamil எழுத்துருவைப்பயன்படுத்த மிகவும் உறுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் கிரந்தம் கலந்த வலைப்பக்கத்தை சிறந்த முறையில் காண இது மிகவும் அவசியம் ஆகும்
Example
கிரந்த எழுத்துரு நிறுவப்பட்டு அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டும் அமைவுகள் சரியாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தால், கீழ்க்கண்ட கிரந்த சொற்றொடர், மூன்றாவது Display இல் இருப்பது போல இருக்க வேண்டும்.
গ্রন্থ লিপি