ஆளுமை:பொன்னம்பலம், கணபதி காங்கேசர்
பெயர் | பொன்னம்பலம் |
தந்தை | கணபதி காங்கேசர் |
பிறப்பு | 1901.11.08 |
ஊர் | அல்வாய் |
வகை | வழக்கறிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னம்பலம், கணபதி காங்கேசர் (1901.11.08 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கணபதி காங்கேசர். இவர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார்.
1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கச் சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டார் இதில் இவர் வெற்றிப் பெறவில்லையாயினும் இதுவே இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து 1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். அவற்றுள் வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வெளி இணைப்புக்கள்
பொன்னம்பலம், கணபதி காங்கேசர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்
வளங்கள்
- நூலக எண்: 11850 பக்கங்கள் 61-62