ஆளுமை:ராசா, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராசா
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1949.11.27
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராசா, செல்லத்துரை (1949.11.27 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. 1969ஆம் ஆண்டிலிருந்து மிருதங்கம் வாசிப்பதிலும், 1974ஆம் ஆண்டிலிருந்து மோர்சிங் இசைப்பதிலும் ஈடுபடத் தொடங்கிய இவர் க. ப. சின்னராசா என்பவரின் வழிகாட்டலில் மிருதங்கத்தினையும், தனது சொந்த முயற்சியினால் மோர்சிங் இசைக் கருவியையும் இசைக்கத் தொடங்கினார்.

1973ஆம் ஆண்டு மல்லாகம் காளிகா தேவி ஆலயத்தில் மிருதங்க அரங்கேற்றம் செய்த இவர் 1994ஆம் ஆண்டில் கம்பன் விழாவிற்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசை விழாவிற்கும், 1999இல் சந்நிதி வசந்தம் ஒலி நாடவிற்கும், 2002இல் நல்லை திருஞானசம்பந்த ஆதீன திறப்பு விழாவிற்கும் மோர்சிங் பக்கவாத்தியகாரராக சேவையாற்றியுள்ளார்.

2002இல் சர்வதேச இந்து மத குருபீடத்தினால் இசைஞான கலாபமணி, 2003இல் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர், ஐயனார் சனசமூக நிலையத்தினால் லயவாருதி, தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையால் நல்மாணாக்கன் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 106