ஆளுமை:ராசா, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராசா
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1949.11.27
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராசா, செல்லத்துரை (1949.11.27 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. 1969 ஆம் ஆண்டிலிருந்து மிருதங்கம் வாசிப்பதிலும் 1974 ஆம் ஆண்டிலிருந்து மோர்சிங் இசைப்பதிலும் ஈடுபடத் தொடங்கிய இவர், க. ப. சின்னராசாவின் வழிகாட்டலில் மிருதங்கத்தையும் தனது சொந்த முயற்சியினால் மோர்சிங் இசைக் கருவியையும் இசைக்கத் தொடங்கினார்.

1973 ஆம் ஆண்டு மல்லாகம் காளிகாதேவி ஆலயத்தில் மிருதங்க அரங்கேற்றம் செய்த இவர், 1994 ஆம் ஆண்டு கம்பன் விழாவிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசை விழாவிற்கும் 1999 இல் சந்நிதி வசந்தம் ஒலி நாடாவிற்கும் 2002 இல் நல்லை திருஞானசம்பந்த ஆதீனத் திறப்பு விழாவிற்கும் மோர்சிங் பக்கவாத்தியக்காரராகச் சேவையாற்றியுள்ளார்.

இவர் 2002 இல் சர்வதேச இந்து மதக் குருபீடத்தினால் இசைஞான கலாபமணி, 2003 இல் வலிகாமம் வடக்கு கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர், ஐயனார் சனசமூக நிலையத்தினால் லயவாருதி, தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையால் நல்மாணாக்கன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 106