ஆளுமை:இராஜன், துரைராஜசிங்கம்
பெயர் | இராஜன் |
தந்தை | துரைராஜசிங்கம் |
பிறப்பு | 1960.08.28 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜன், துரைராஜசிங்கம் (1960.08.28 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை துரைராஜசிங்கம். யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரியில் குடிசார் கற்கை நெறியை முடித்து தொழில்நுட்ப்ப உத்தியோகத்தராக கடமை புரிந்துள்ளதுடன் 30 வருட காலங்கள் இசை சேவை புரிந்துள்ளார். தனது மிருதங்கக் கலையை முன்னாள் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சுவாமிகள், எஸ். ஏ. இராமநாதன், எஸ். மகேந்திரன் போன்றோரிடமும் புல்லாங்குழல் கலையை நமசிவாயம், பிரம்மஶ்ரீ சர்வேஸ்வர சர்மா ஆகியோரிடமும் கற்றார்.
முன்னாள் நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சுவாமிகள், நித்தியானந்த சர்மா ஆகியோரது இசைச் சொற்பொழிவிற்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளதோடு, புல்லாங்குழல் தனிக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். பிரபல இசைக்குழு ராஜன்ஸ் குழுவிற்கு பின்னணி இசைத்ததோடு பல மிருதங்க மாணவர்களையும் உருவாக்கியுள்ளார். மிருதங்க கலாவித்தகர் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 101