ஆளுமை:செல்வநாயகம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம், கந்தையா
தந்தை கந்தையா
தாய் தங்கம்மா
பிறப்பு 1946.04.06
ஊர் வாழைச்சேனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. செல்வநாயகம் (1946.04.06 - ) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் தங்கம்மா. வாழைச்சேனை இந்துக் கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். இவர் 1967ஆம் ஆண்டு வன பரிபாலன சபை அதிகாரியாகச் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்துத்துறையில் உரிமைப் போர், சோக்ரடீஸ், தேர்தல் களத்தினிலே போன்ற நாடகங்களை இவர் எழுதியதுடன் அவற்றை இயக்கியும், நடித்தும் வந்தார். நாடக எழுத்துக்குப் புறம்பாக சிறுகதை, கட்டுரை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளிலும் ஆர்வம் காட்டி வரும் இவரது படைப்புக்கள் தாரகை, சுடர், சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவருவதோடு தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம், தாமரை, கணையாளி போன்ற ஏடுகளிலும் இடம் பெற்றுள்ளன.

இவரது பல சிறுகதைகள் தேசிய, பிரதேச ரீதியில் பரிசில்களைப் பெற்றுள்ளன. கலாசாரத் திணைக்களத்தால் 2005 மற்றும் 2006ஆம் ஆண்டு தேசிய இலக்கிய விழாவின் போது மாவட்ட மட்டத்தில் இவரது சிறுகதைகள் முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டதோடு கலை இலக்கியத்துறையில் இவர் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆற்றிய பணியினை கௌரவிக்கும் முகமாக 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 70-73