ஆளுமை:செல்வநாயகம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம்
தந்தை கந்தையா
தாய் தங்கம்மா
பிறப்பு 1946.04.06
ஊர் வாழைச்சேனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம், கந்தையா (1946.04.06 - ) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் தங்கம்மா. இவர் வாழைச்சேனை இந்துக் கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். இவர் 1967 ஆம் ஆண்டு வன பரிபாலன சபை அதிகாரியாகச் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் உரிமைப் போர், சோக்ரடீஸ், தேர்தல் களத்தினிலே போன்ற நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்ததுடன் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இவரது படைப்புக்கள் தாரகை, சுடர், சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய தேசியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவருவதோடு தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம், தாமரை, கணையாளி போன்ற ஏடுகளிலும் இடம் பெற்றுள்ளன.

இவரது பல சிறுகதைகள் தேசிய, பிரதேச ரீதியில் பரிசில்களைப் பெற்றுள்ளன. கலாச்சாரத் திணைக்களத்தின் 2005- 2006 ஆம் ஆண்டு தேசிய இலக்கிய விழாவின் போது மாவட்ட மட்டத்தில் இவரது சிறுகதைகள் முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டதோடு கலை இலக்கியத்துறையில் இவர் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆற்றிய பணியினைக் கௌரவிக்கும் முகமாக 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் விருது வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 70-73