ஆளுமை:குகதாசன், இராசையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகதாசன், இரசையா
பிறப்பு 1953.11.20
ஊர் நாயன்மார்கட்டு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.குகதாசன் (1953.11.20 - ) யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தை பெயர் இராசையா. யாழ்/ நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ்/ மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றறிந்த இக் கவிஞர் ஆன்மீக துறையில் அதிக ஈடுபாடு கொண்டவராயும், சமூக சேவையாளனாகவும் இருந்து வருகின்றார்.

இவர் இலங்கை அரசாங்க நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றதோடு யாழ்ப்பாணம் சைவ பரிபாலண சபையின் உபதலைவராகவும், திருநெல்வேலி சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தின் சமய திட்டப் பணிப்பாளராகவும் இருந்து நற்பணியாற்றி வருகின்றார். கவிதை, கீர்த்தனை, பாடல்கள் எழுதுவதில் ஆற்றல் மிக்க இவர் ஈழத்து தமிழ் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். இருபத்துமூன்று ஆலயங்களுக்கு திருவூஞ்சற் பாமாலை பாடியபோதும் புத்தக வடிவில் வெளியானவை பதினாறு ஆகும். சிவாலயங்களில் பூசைகளில் சிவத்தமிழ் பேதங்கள், அபரக் கிரியையில் ஒரு நோக்கு எனப்பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

கவிஞர் இராசையா குகதாசன் அவர்கள் காலத்துக்கு காலம் “திருமுறைத் தேனமுது” ஒலிப் பேழைகளையும், குறுந்தட்டுகளையும் வெளியிட்டு பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இக்கவிஞரது புகழை மேலும் உயர்வு செய்யும் வகையிலாக “வாழ்வில் வளம் தரும் வண்டமிழ் வேதங்கள்” என்னும் பெருந்தொகுப்பு நூலினை எழுதியுள்ளார். முருகேசன், தாசன் என்ற புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. கல்வெட்டுக்கள் பல எழுதுவதோடு யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நிறுவனங்கள், பெரியார்களின் விழாக்களுக்கு கவிதையும் எழுதிவருகின்றார். இவர் நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலயத்திற்கு 'மகா ஆசீர்வாதம்' தமிழில் இயற்றி இந்துக் குருமாரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 30


வெளி இணைப்புக்கள்