ஆளுமை:பேரின்பநாதன், ஆ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாதன், ஆ.
பிறப்பு 1944
ஊர் புங்குடுதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ.பேரின்பநாதன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார். மருத்துவப் பட்டங்களை அடுத்து முதுமானிப் பட்டத்தைப் பெற்ற இவர், உள்ளக பயிற்சியை களுபோவில வைத்தியசாலையில் பெற்றார்.

இவர் 1970ஆம் ஆண்டு பருத்திதுறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் வைத்திய நலன் பேண் அதிகாரியாக முதல் நியமனம்பெற்றார். பின் அங்கொட முல்லேரியா வைத்தியசாலையில் மனநலம் நரம்பு நோய் சத்திர சிகிச்சைப் பற்றிய விசேட பயிற்சி பெற்று 1982ஆம் ஆண்டு பரிபாலகராக பதவி உயர்வு பெற்று ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றார். இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்த போது இடம்பெற்ற யுத்தங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவி செய்வதிலும் முன்னின்று உழைத்தார்.

புங்குடுதீவு மக்களின் நலன் கருதி அமிர்தம் கிளினிக் என்ற ஓய்வு நேர வைத்தியசாலையை நடாத்தினார். 2004ஆம் ஆண்டு தொடக்கம் தனது மருத்துவ மனையின் கிளைகளை அல்லைப்பிட்டியிலும் மண்டைதீவிலும் நிறுவி பொதுமக்களுக்கு வைத்திய சேவையாற்றினார். எழுத்துத் துறையிலும் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய இவர் பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்தோடு சுகவாழ்வு எனும் நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். சரித்திரம் சம்பந்தமாக பல தேடல்களை செய்து வந்த இவர் இராவணன் காலத்திலிருந்து இயக்கர், நாகர் காலம் வரை இலங்கை திராவிட நாடாகவே திகழ்ந்தது என்பதற்கான பல சான்று நூல்களை தேடி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 228-229
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பேரின்பநாதன்,_ஆ.&oldid=157664" இருந்து மீள்விக்கப்பட்டது