ஆளுமை:சதாசிவம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம் கணபதிப்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் அன்னம்மா
பிறப்பு 1905.10.07
இறப்பு 1986.04.08
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம் கணபதிப்பிள்ளை அவர்கள் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்பக்கல்வியை வேலணையிலும், யாழ் வைதீஸ்வராக் கல்லூரியிலும் கற்று தனது 18ஆவது வயதில் மலேசியா சென்று கோலம்பூர் பட்டினத்தின் முதன்மை வாய்ந்த மெதடிஸ் ஆண்கள் பாடசாலையில் இடைநிலை கல்வியை கற்றார். மலேசியாவின் பொது வேலைப்பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக இணைந்த இவர் தனது புத்தி கூர்மையினாலும் கடின உழைப்பாலும் விரைவான பதவி உயர்வு பெற்று (PWD) கட்டிடப் பிரிவின் பொறியியலாளராக உயர்ந்தார். பின் இவர் தனது 47ஆவது வயதில் சொந்த மண்ணுக்கு திரும்பி வேலணை கிராமச் சங்க தலைவராக இருந்து பல சமூக சேவைகளை ஆற்றினார். வேலணையில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் பாடசாலையை அம்பிகை மகளிர் பாடசாலையாகவும் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தை ஆண்கள் பாடசாலையாகவும் மாற்றியமைப்பதில் முன்னின்று உழைத்தார். சிறந்த பொறியியலாளராக யாழ்.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தின் பல்வெறு கட்டிடங்களையும், வேலணையில் கமநல சேவை நிலையத்தையும் , மிருகவைத்திய நிலையத்தையும், வேலணை மத்திய மாகாவித்தியாலயதின் கட்டிடங்களையும் நிர்மானித்தார். மேலும் தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கும் கடலை பாலத்தால் இணைப்பதற்கு அமரர் வீ.ஏ.கந்தையாவுடன் இணைந்து இணைப்புப் பாலத்தினை அமைப்பதில் முன்னின்று பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 513-517