ஆளுமை:சதாசிவம், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் அன்னம்மா
பிறப்பு 1905.10.07
இறப்பு 1986.04.08
ஊர் வேலணை
வகை அரசியற் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், கணபதிப்பிள்ளை (905.10.07- 1986.04.08) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசியல் தலைவர். இவரின் தந்தை கணபதிப்பிள்ளை; தாய் அன்னம்மா. இவர் ஆரம்பக்கல்வியை வேலணையிலும் யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கற்றுத் தனது 18 ஆவது வயதில் மலேசியா சென்று கோலாலம்பூர் பட்டினத்தின் முதன்மை வாய்ந்த மெதடிஸ் ஆண்கள் பாடசாலையில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். மலேசியாவின் பொது வேலைப்பகுதியில் தொழில்னுட்ப உத்தியோகத்தராக இணைந்து பின்னர் பதவி உயர்வு பெற்றுக் (PWD) கட்டிடப் பிரிவின் பொறியியலாளரானார்.

தனது 47 ஆவது வயதில் சொந்த மண்ணுக்குத் திரும்பி வேலணை கிராம சங்கத் தலைவராகிப் பல சமூக சேவைகளை ஆற்றினார். வேலணையில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் பாடசாலையை அம்பிகை மகளிர் பாடசாலையாகவும் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தை ஆண்கள் பாடசாலையாகவும் மாற்றியமைப்பதில் முன்னின்று உழைத்தார்.

இவர் யாழ்.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பல்வேறு கட்டிடங்களையும் வேலணையில் கமநல சேவை நிலையத்தையும் மிருகவைத்திய நிலையத்தையும் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தின் கட்டிடங்களையும் நிர்மாணித்தார். மேலும் தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கும் கடலைப் பாலத்தை இணைப்பதற்கு அமரர் வீ.ஏ.கந்தையாவுடன் இணைந்து பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 513-517