"ஆளுமை:நடராசா, பிரான்சிஸ் சேவியர் செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

23:43, 9 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நடராசா
தந்தை பிரான்சிஸ் சேவியர் செல்லையா
தாய் சிவகாமிப்பிள்ளை
பிறப்பு 1911.07.21
இறப்பு 1997.03.16
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, பிரான்சிஸ் சேவியர் செல்லையா (1911.07.21 - 1997.03.16) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பிரான்சிஸ் சேவியர் செல்லையா; தாய் சிவகாமிப்பிள்ளை. இவர் மகாவித்துவான் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர்.

இவர் காரைநகர் அம்பலச் சட்டம்பியார், சுளிபுரம் அதிபர் சு. சிவபாதசுந்தரம், காரைநகர் உடையார் நாகலிங்கம், காரைநகர் சபாபதிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆரம்பத்தில் கற்றார். பின்னர் சுவாமி விபுலானந்தரைக் குருவாகக் கொண்டு பாலபண்டிதம் கற்றார். மட்டக்களப்பு கத்தோலிக்கப் பாடசாலைகளில் ஞானச் சகோதரர்களின் ஆதரவில் வளர்ந்ததோடு அருட் சகோதரர் இன்னாசிமுத்து, அருட் சகோதரர் பிலிப்பு ஆகியோரிடமும் கற்றார்.

ஆசிரியராக, அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, அரசகரும மொழித் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தராக, கல்வித்திணைக்கள மொழிபெயர்ப்பு அத்தியட்சகராக பணியாற்றிய இவர் சைவம், கிறீஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களைச் சார்ந்த இலக்கியம், இலக்கணம், வரலாறு தொடர்பான 21 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது நூல்களுள் எண்ணெய்ச் சிந்து, ஈழமும் தமிழும், இலங்கைச் சரித்திரம், மொழி பெயர்ப்பு மரபு, ஈழத்து நாடோடிப் பாடல்கள், ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் (சொல்லதிகாரம்), தி. த. கனகசுந்தரம்பிள்ளை, போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை, காரைநகர் மான்மியம், கண்ணகி வழக்குரை, நாவலர் பெருமான் வாழ்க்கைக் குறிப்புக்கள், ஸ்ரீமத் சுவாமி் விபுலானந்த ஜீ, விபுலானந்தர் மீட்சிப் பத்து, நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும், மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், மட்டக்களப்பு மான்மியம் போன்றனவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றுள் மட்டக்களப்பு மான்மியம் இலங்கை சாகித்ய மண்டலப் பரிசு பெற்றது. அதற்காக மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 'மகாவித்துவான்' என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளதோடு 1991ல் சாகித்திய மண்டல விழாவில் 'இலக்கிய செம்மல் விருதையும் இலங்கை அரசால் 'கல்லூரி' விருதையும் இவர் பெற்றுள்ளார். மேலும் 1995ல் நடைபெற்ற கம்பன் விழாவில் 'கம்பனடிப் பொடி சா. கணேசன்' நினைவுப் பரிசிலையும் கம்பன் கழகத்தால் இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 335
  • நூலக எண்: 4413 பக்கங்கள் 08-14
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 72