பகுப்பு:மகுடம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
14019.JPG

'மகுடம்' மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்கான காலாண்டிதழாகும். 2012ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்டுக்கு நான்கு இதழ்களாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. இவ் இதழானது; கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு தொடர்பான தொன்மங்களைச் சமகாலப் பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுக்குட்படுத்துவதனையும் புதிய தேடல்களுடன் கூடிய நவீன இலக்கியம் சார்ந்த ஆக்கபூர்வமான இலக்கியப் படைப்புக்கள், வடிவங்கள் முதலியவற்றைப் பரிணமிக்கச் செய்வதனையும் இருவேறு தளங்களாக கொண்டமைந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டினதும் இறுதி காலாண்டில் வெளிவரும் மகுடம் இதழ் 'மலையகச் சிறப்பிதழாக, மலையகம் சார்ந்த ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவருகின்றதும்' குறிப்பிடத்தக்க விடயமாகும். இவற்றுடன் 'தாமரைத் தீவான்', 'தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார்', பிரமிள் போன்ற பல்வேறு ஆளுமைகளை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்தும் சிறப்பிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனடிப்படையில் ஆய்வுகள், மொழி பெயர்ப்பு கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், நாடகம், குறுநாவல், கவிதைகள், சிறுகதைகள், என்பவற்றுடன் நூல் விமர்சனங்கள் போன்ற பல அம்சங்களையும் உள்ளடக்கங்களாக கொண்டுள்ளன.

மகுடம் இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின் ஓர் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவர். 'என் பிரிய ராஜகுமாரிக்கு' எனும் கவிதை நூல் திரு வி.மைக்கல் கொலினின் எழுத்தில் உருவானது. இவற்றுடன் பல பத்திரிகைகளிலும் இவரது கதைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்கள் வெளிவருகின்றன. இவரால் முன்னெடுக்கப்படுகின்ற 'மகுடம் வெளியீடு' ஊடாக பல நூல்களும் வெளியிடப்பட்டு வருகின்றது. 'ஈழத்து முச்சந்தி இலக்கியம்' (பேரா.செ.யோகராசா), 'சங்க காலம் முதல் இக்காலம் வரை' (பேரா.சி.மெளனகுருவின் பேட்டிகள்), வண்ண வண்ணப் பூக்கள்-சிறுவர் பாடல்கள் (ஷெல்லி தாசன்) போன்ற நூல்களும் இவற்றில் அடங்கும்.

தொடர்புகளுக்கு:- ஆசிரியர்,'மகுடம்', இல-90, பார் வீதி, மட்டக்களப்பு, இலங்கை. T.P:- 0094-77-4338878 E-mail:- w.michaelcollin@ymail.com Web:- www.magudammichael.blogspot.com

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மகுடம்&oldid=162224" இருந்து மீள்விக்கப்பட்டது