வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்

From நூலகம்


மொழிபெயர்ப்பியல்

ஒரு மொழியில் உள்ள உரைப்பகுதியின் பொருளை விளக்கி அதே பொருள் தரக்கூடிய இன்னொரு உரைப்பகுதியை வேறொரு மொழியில் உருவாக்குதல் மொழிபெயர்ப்பு எனப்படுகின்றது. இங்கே முதல் உரைப்பகுதி மூல உரைப்பகுதி என்றும் உருவாக்கப்பட்ட உரைப்பகுதி இலக்கு உரைப்பகுதி என்றும் குறிப்பிடப்படுகின்றது. இலக்கு உரைப்பகுதி, மூல உரைப்பகுதியின் மொழிபெயர்ப்பு ஆகும்.

மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம்

1642.JPG

மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம் (2002): அரசகரும மொழித் திணைக்கள நூல் வெளியீட்டுப் பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிய கவிஞர் இ. முருகையன் எழுதிய இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலில் விளக்கங்களும் வரைவிலக்கணங் களும், வழிமுறைகளும் மாதிரியுருக்களும், அமைப்புகளின் ஒப்பீடு, சொல்லும் பொருளும், மரபுத் தொடர்கள் எனப்படும் ஆகுமொழிகள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழிபெயர்ப்பு, பன்மொழிப் பயில்வு ஆகிய ஒன்பது இயல்களும் தமிழ் மொழிபெயர்ப்பின் தொடக்கங்கள் எனும் பின்னிணைப்பும் உள்ளது.

மொழிபெயர்ப்புக்கலை

4704.jpg

மொழிபெயர்ப்புக்கலை (1954): இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பதிப்புக்களின் உதவி ஆசிரியராகவும் இலங்கை அரசாங்க மொழிகள் அலுவலக சிரேட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த அ. க. சுப்பிரமணியம் எழுதிய இந்நூல் பெருமளவு எடுத்துக்காட்டுக்களுடன் மொழிபெயர்ப்புக்கலையை விளக்குகிறது. கிறீத்துவப் பாதிரிமார் காட்டிய வழி, சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு, கிரந்த எழுத்துக்கள் உள்ளிட்ட பன்னிரு அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது.

மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்

2599.JPG

மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும் (1967): தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையால் எழுதப்பட்டுச் சென்னை அருள் நிலையத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 76 பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், பன்றியிரும்புப் பதம் பார்த்த கதை, திணைக் களம் வந்த கதை, பாயிரமும் மதிப்புரையும், விமரிசனமும் மதிப்புரையும், சொல்லாக்கம் எனும் ஆறு அத்தியாயங்களாக நூல் அமைந்துள்ளது. Department என்பதற்குத் திணைக்களம் எனும் சொல் இலங்கையில் பெருவழக்குப் பெற்ற வரலாறு சுவைபட இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு மரபு

4829.jpg

மொழிபெயர்ப்பு மரபு (1954): எவ். எக்ஸ். ஸி. நடராசாவால் செந்தமிழ் இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் நூல்வடிவமே இதுவாகும். 40 பக்கங்கள் கொண்டமைந்துள்ளது. மொழிபெயர்த்தல் தமிழ் மக்களுக்குப் புதியதன்று. பண்டு தொட்டு நடந்து வருவது எனத் தொடங்கும் நூன்முகத்துடன் ஆரம்பிக்கும் இந்நூல் ஒரு விரிவான கட்டுரையையும் தமிழுக்கு மொழிபெயர்க்கவென ஆங்கில உரைப்பகுதியையும் கொண்டுள்ளது. வைத்தியர் ச. வி. கிறீன் கடைப்பிடித்த கலைச்சொல்லாக்க முறை பற்றிய குறிப்புக்களும் இந்நூலில் சுட்டப்படுள்ளன.

நூல் 5

1487.JPG

A Guide to Translation (1962): ச. வீரசிங்கத்தினால் ஜீ. சீ. ஈ. வகுப்பு மாணவர்களுக்கென எழுதப்பட்ட நூல் இதுவாகும். 1962 இல் ஜீ. சீ. ஈ. ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பும் முக்கியம் இடம் பெற்றது. ஆங்கிலத்தைத் தமிழிலும் தமிழை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதற்கேற்றதாக உருவானதே இந்நூலாகும்.

மேலும்

சில பயனுள்ள நூல்கள்

  • மொழிபெயர்ப்பியல். (ந. முருகேசபாண்டியன்)

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

Information Resource Type : Books [8,910] Magazines [11,617] Newspapers [44,652] pamphlet [1,033] நினைவு மலர்கள் [864] சிறப்பு மலர்கள் [3,358]

Categories : Authors [3,691] Publishers [3,095] Year of Publication [138]

Reference Resources : Organizations [1,700] Biographies [2,745]

Information Access Entry Points : Project Noolaham [70,434] Key Words [89] Portals [25]

Special Collections : Muslim Archive [222] Upcountry Archive [135] Women Archive [5] Manuscripts [24]

Sister Projects : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive