ஆளுமை:பழனிமலை, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பழனிமலை
தந்தை குமாரவேலு
பிறப்பு 1931.06.06
ஊர் மட்டுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பழனிமலை, குமாரவேலு (1931.06.06 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை குமாரவேலு. இவர் ஆரம்பக் கல்வியை இணுவில் இந்துக் கல்லூரியில் கற்கும் காலத்தில் தவிலிசையைக் கிருஷ்ணமூர்த்தி, சின்னத்துரை, இராஜகோபால் ஆகியோரிடம் பயின்றார். பின்னர் தனது 12ஆ வது வயதில் இந்தியாவிற்குச் சென்று அங்கும் இசைக் கல்வி பயின்றார்.

இவர் 1967 ஆம் ஆண்டு தமிழ் இசைச் சங்கத்தின் ஆதரவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாதஸ்வரக் கச்சேரியில் தவில் மேதை தட்சணாமூர்த்தியுடன் இணைந்து வாசித்தார். கொழும்பு ஆடிவேல் விழாவிற்கு வருகை தந்த இந்திய நாதஸ்வர மேதை திரு மெஞ்ஞானம் நடராசா சுந்தரம்பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியில் வாசித்துப் பாராட்டப்பட்டார். இவர் இணுவில் கந்தசாமி கோவிலில் தவில் இசைக்கத்தார்.

இவரது தவிலிசை ஆளுமையைக் கெளரவித்து ஶ்ரீ கரலேக சுரதாளக்கிய கலிபுக வரத பால நந்தீஸ்வரன், லய நாத குரே பாரதி, கரலேக நரதசிம்மம், லயநாத விவாகார பாரதி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 97-98