ஆளுமை:சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:32, 26 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சத்தியசீலன்
தந்தை பாவிலுப்பிள்ளை
பிறப்பு 1938.06.15
ஊர் அல்லைப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை (1938.06.15 - ) யாழ்ப்பாணம், வேலணை, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்புத்துறையில் கற்றார். பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து பட்டதாரியாக விளங்கினார்.

இவர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை ஆக்கினார். இவை மேலைநாட்டுப் பாணியில் அமைந்த விடுகதைப்பாக்களாக மிகுந்த ஓசை நயமும் நடிப்புணர்ச்சியும் கொண்டவையாகும். இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டலப் பரிசில்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமாக அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை காணப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 16