ஆளுமை:கந்தசாமி, கந்தையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:55, 8 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை கந்தையா
பிறப்பு 1929
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, கந்தையா (1929 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா. இவர் யாழ் நாவலர் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யா/ வைத்தீஸ்வரா வித்தியாலயத்திலும் கற்று, பின்னர் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பத்தொன்பது வயதில் வெளியேறி அரச பாடசாலைகளில் கற்பித்து யாழ். ஆனைக்கோட்டை தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராக இருந்து ஓய்வு பெற்றவராவார்.

புதுமைலோலன் என்ற புனைபெயரில் இலக்கிய உலகில் சஞ்சரிக்கும் இவர், சிறந்த மேடைப் பேச்சாளருமாவார். இவரது சிறுகதைகளில் கௌதம புத்தர் கூறிய ஒழுக்க விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். இவர் கருகிய ரோஜா என்ற குறுநாவலையும், தாலி, நிலவும் பெண்ணும் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 41