ஆளுமை:அபூதாலிப், மயிதீன் பாவா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அபூதாலிப்
தந்தை மயிதீன் பாவா
தாய் பாத்தும்மா பீவி
பிறப்பு 1952.12.17
ஊர் அநுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அபூதாலிப், மயிதீன் (1952.12.17 - ) அநுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை மயிதீன் பாவா; தாய் பாத்தும்மா பீவி. இவர் அநுராதபுரம் நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். 1977ஆம் ஆண்டு மிகிந்தலை தொகுதியிலுள்ள கல்லஞ்சியாகம அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் 1981 - 1982ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். பின் எட்டவீரவெவ முஸ்லிம் வித்தியாலயம், நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரபொத்தான முஸ்லிம் வித்தியாலயம், கடாண்டுகம ஜாயா மகா வித்தியாலயம், மடாட்டுகம முஸ்லிம் வித்தியாலயம், நேகம்பஹ சிங்கள மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அசிரியராக கடமையாற்றியுள்ளார்.


சிறுகதைகள், உருவகக் கதைகள், போன்ற பலதரப்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, சங்கமம், இடி, நவமணி போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன. தினகரன் பத்திரிகையின் நிருபரான இவர் நூற்றுக்கணக்கான செய்திகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 64-66