ஆளுமை:அருந்தவராஜா, கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:50, 11 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருந்தவராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருந்தவராஜா
தந்தை கந்தையா
தாய் -
பிறப்பு 1963.10.17
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருந்தவராஜா, கந்தையா (1963.10.17 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் ஆசிரிய ஆலோசகர், விரிவுரையார், கவிஞர், விமர்சகர். இவரது தந்தை கந்தையா. இவர் தனது பாடசாலைக் கல்வியை யா / மட்டுவில் மகா வித்தியாலயத்திலும், யாழ் பல்கலைக்கழத்தில் BA , M.Ed ஆகிய பட்டங்களையும், இலங்கை திறந்த பல்கலைக்கழத்தில் Dip in Ed பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பல தமிழியல் ஆய்வு மாநாட்டில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதோடு, பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல கவிதைகளை எழுதியுள்ளதோடு "அகத்தீ" என்ற திரைப்படத்தின் கதாசிரியருமாவார். சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் வாழ்ந்துவரும் இவர், ஜெனீவா கலை இலக்கியப் பேரவையின் தலைவருமாவார்.கிராமத்தின் சிரிப்பு, குடும்பத்துள் வாழ்தல், புலம் பெயரும் மண் வாசம், சுவிற்சர்லாந்து ஒரு முன்னுதாரணம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவர் பல நாடகங்களை எழுதி, இயக்கியுள்ளதோடு, விவாதம், கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் இலங்கையில் தேசிய நிலையில் முதன்மை பெறக் காரணமாக இருந்துள்ளார். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் கல்விச் சேவை வளவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்