விழுது

From நூலகம்
Name விழுது
Category பெண்கள் நிறுவணம்
Country இலங்கை
District கொழும்பு
Place
Address
Telephone
Email
Website

விழுது கொழும்பு, இலங்கை எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசு அல்லாத (அரசசார்பற்ற) ஓர் அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளன.

அரசியல் உயர்மட்டங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்றன. சிவில் சமூகம் ஊக்கமற்றுக் கிடக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணங்கள் இவையேயாகும். நல்லாட்சி ஏற்படுத்தப்படாவிட்டால், எந்தளவுதான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும் நாட்டை மீட்டெடுக்க முடியாது. இரண்டரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக போர் நீடித்த ஒரு நாட்டில் இராணுவமயமாக்கல் மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. சிவில் சமூகத்தினால் சுதந்திரமாகப் பேச முடியவில்லை. இத்தகைய பின்புலத்திலே, இளைஞர்கள், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பெண்கள் ஊடாக உள்ளூராட்சி அமைப்புகள், தனியார்துறை மற்றும் ஊடகத்துறை ஊடாக சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றவேண்டியது மிகமிக அவசியமானது என்று விழுது கருதுகிறது”.


போரின் காரணமாக கணவர்மாரை இழந்து பெண்கள் தலைமையிலான குடும்பங்களினதும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த சாந்தி பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் ஈடுபாட்டுடன் சாசனம் ஒன்றை வரைந்தார். வடக்கு கிழக்கில் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்கள் தலைமையில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 85 ஆயிரமாகும். மகளிர் விவகார அமைச்சு, வடக்கு – கிழக்கு, வடமேல் மாகாண சபைகள், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு அந்த விதவைகள் சாசன பிரதிகள் கையளிக்கப்பட்டன.

போஷாக்குத் திட்டம் ஒரு கோப்பை உணவு (One dish meal என்ற பெயரில் போஷாக்கு ஆலோசகரான திருமதி விசாகா திலகரத்னவுடன் சேர்ந்து போஷாக்குத் திட்டத்தை சாந்தி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூதூர், புத்தளம் மற்றும் வேறு சில பகுதிகளில் ‘சஞ்சீவி’ சேதன உணவு கொட்டகைகள் நிறுவப்பட்டன. தெற்காசிய நாடுகளில் வகைமாதிரி உணவு என்று அங்கீகரிக்கப்பட்ட இதை விளங்கிக் கொள்வதற்காக உலக வங்கி பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இந்தியாவில் இருந்து ஒரு குழுவினரை இலங்கைக்கு அழைத்துவந்தது. (2015 ஆகஸ்ட் 29 கொழும்பு ரெலிகிராபில் விசாகா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.) போர் பற்றிய பெண்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், வவுனியா, மொனராகலை, பிரிட்டன், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடாவில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மத்தியஸ்த சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் கல்வி வட்டம்/ வாசகர் வட்டத்தின் ஊடாக மத்தியஸ்த சபை கோட்பாட்டை அறிமுகப்படுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மத்தியஸ்த சபைகளில் பங்கேற்கும் பெண்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவுக்கு உதவுவதில் சாந்தி பெரும்பணியாற்றினார். நாடு பூராகவும் 2012ஆம் ஆண்டில் சராசரியாக 5 சதவீத பெண்களே மத்தியஸ்த சபைகளில் பங்கேற்றார்கள். பயிற்சித் திட்டங்களில் பயன்படுத்துவதற்காக உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் கருத்தோவியக் கைநூலொன்றை தமிழ் மொழியில் தயாரித்த சாந்தி, பெண்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி சபைகளை அணுகுவதற்கு உதவி செய்தார்.

உள்ளூராட்சி முறையில் ஆலோசனைக்குழு நியமனம் சில உள்ளூராட்சி சபைகள் பெண்களின் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் “வாக்குகளால் பேசுவோம்” என்ற தலைப்பில் தமிழில் விவரணத் தொகுப்பு ஒன்றைத் தயாரிப்பதில் சாந்தி பெரும் பங்காற்றினார். இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்தல்களில் வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கையை கணிசமானளவுக்கு அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.

அரசியல் பங்கேற்பு பெண்கள் பங்கேற்புடன் மக்கள் ஆலோசனைக் குழுக்களை அவற்றின் செயற்பாடுகளுக்குள் சேர்த்துக்கொண்டன. வாக்காளர் அறிவூட்டல் தொடர்பில் வாக்குகளால் பேசுவோம் அமைப்புகள் பலவற்றுடன் ஒன்றிணைந்து சாந்தி அரசியலில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிரசாரம், ஒழுங்கமைப்பு மற்றும் விளம்பரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் பெண்களுக்கு பயிற்சியளித்தார். அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமுடைய பெண்களின் பெயர்ப்பட்டியல்கள் சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

பெண்களின் 100 கோடி எழுச்சி 2012ஆம் ஆண்டு சாந்தி தனது அமைப்பின் மூலமாக பெண்களின் 100 கோடி எழுச்சி (One Billion Rising of Women) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். இதன் ஒரு அங்கமாக சாந்தியும் அவரது சகோதரி செல்வியும் பாடிய பாடல் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. இந்தச் செயற்றிட்டங்கள் சகலவற்றுக்கும் மேலதிகமாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த No Run Tell திட்டமொன்றையும் சாந்தி அறிமுகப்படுத்தினார்.