விசாரம்

From நூலகம்
விசாரம்
633.JPG
Noolaham No. 633
Author பொன்னம்பலம், மு.
Category இலக்கியக் கட்டுரைகள்
Language தமிழ்
Publisher -
Edition 2004
Pages 12 + 136

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

விசாரம், உண்மையைத் தேடிச்சென்ற உபநிஷத கால நசிகேதனிலிருந்து புத்தர், மகாவீரர், சங்கரர் ஊடாக கீழைத்தேய ஆன்மீகப் பண்பாடாக, இயங்கியல் பார்வையின் மைய ஊற்றாக இருந்து வந்துள்ளது. விசாரம் ஒருவனை விடுதலைக்கு இட்டுச் செல்லும் வழியென்பர். விடுதலைக்கு எல்லையில்லை. எல்லைகளை நாமே வகுக்கின்றோம். நமது சிந்தனைகளும் செயல்களும் வகுக்கின்றன. ஒவ்வொன்றின் அறிவுக்கேற்ப ஒவ்வொன்றினது விடுதலை குறுகவும் விரியவும் செய்கின்றது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள 18 கட்டுரைகளில் பெரும்பாலான விசாரங்கள் 1998இல் சரிநிகர் இதழ்களில் “ஒரு சிறு அலசல்” என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியானவை. மற்றும் சில காலச்சுவடு, மூன்றாவது மனிதன், திசை, காந்தியம் போன்ற சிறு சஞ்சிகைகளில் பிரசுரமானவை. பரந்துசெல்ல முயலும் கருத்தியல் நோக்கைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தரிசனம் மிக்க எதிர்காலக் கலை இலக்கியப் படைப்புக்களை அவாவி நிற்கின்றது.


பதிப்பு விபரம் விசாரம்: கடக்கப்பட வேண்டிய கட்டுக்கள். மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 49/1, வன்டவேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், 581,2/1, காலி வீதி, வெள்ளவத்தை). 12 + 136 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 3800)