முற்றத்து ஒற்றைப்பனை
முற்றத்து ஒற்றைப்பனை | |
---|---|
| |
Noolaham No. | 74 |
Author | செங்கை ஆழியான் |
Category | தமிழ் நாவல்கள் |
Language | தமிழ் |
Publisher | சிரித்திரன் பிரசுரம் |
Edition | 1972 |
Pages | 39 |
To Read
- முற்றத்து ஒற்றைப் பனை (141 KB)
- முற்றத்து ஒற்றைப் பனை (1.72 MB) (PDF Format) - Please download to read - Help
Book Description
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிராமத்தைக் களமாகக்கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் காற்றாடிக்கலையின் பெருமை யைப் பலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட நகைச்சுவைக் கிராமியச் சித்திரம். எழுபது வயதாகியும் முற்றத்துப்பனையில் விட்டம் போட்டுக் காற்றாடி விடுகின்ற பழக்கமும், வெறியும் தீராத வண்ணார்பண்ணைக் கொக்கர் மாரிமுத்தரையும், அந்த நெடுந் துயர்ந்த பனைமரம் காற்றுக்கு எங்கே தனது வீட்டின்மேல் பாறி விடுமோ என்று பயப்படுகின்ற அவரின் மைத்துணர் அலம்பல் காசிநாதரையும் அவர்களிடையே வளர்ந்துவரும் பகைமை உணர்வையும் வைத்துப் புனையப்பெற்ற நகைச்சுவை நவீனம்.
பதிப்பு விபரம்
முற்றத்து ஒற்றைப்பனை. செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: மீரா வெளியீடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1989. 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம், காங்கேசன்துறை வீதி)
viii + 52 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 18.5*13 சமீ.
-நூல் தேட்டம் (# 715)