பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம்

From நூலகம்
Name பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம்
Category அரச சார்பற்ற நிறுவனம்
Country இலங்கை
District மட்டக்களப்பு
Place
Address பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம், மட்டக்களப்பு
Telephone
Email
Website

பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் மட்டக்களப்பில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்ற மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதைப் பிரதான நோக்கமாகக்கொண்டு செயற்பட்டு வரும் நிறுவனமே பெண்கள் அபிவிருத்தி ஒன்றியமாகும்.

1994ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவரும் இந்நிறுவனம் மக்களது சமூகப் பொருளாதாரவளத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு உள்ளுர், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

மாநகர சபைக்குட்பட்ட பத்து கிராமங்களில் கட்டுமான வேலைகள், மக்ளக் விழிப்புணர்வுத் திட்டங்கள், சிறுகடன் உதவிகள் போன்ற திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாவற்குடா கிழக்கு, மஞ்சந்தொடுவாய்தெற்கு, நொச்சிமுனை, கல்லடிவேலூர் ஆகிய கிராமங்களும் நெக்டொப் கிராமங்களான வீச்சுக்கல்முனை, திருப்பெருந்துறை, திமிலைத்தீவு, புதுநகர், நாவற்குடா தெற்கு, மஞ்சந்தொடுவாய் வடக்கு ஆகிய கிராமங்களிலும் மக்களது வாழ்வாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்வதில் பெண்கள் அபிவிருத்தி ஒன்றியம் பெரும் பங்காற்றியுள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ் தமது வாழ்க்கையை நடத்தி வரும் பெரும்பாலான மக்களுக்கு தேவைப்படும் வீதிகள், பொதுக்கிணறுகள், குழாய்க்கிணறுகள், மீன்பிடியாளர்கள் தங்கும் அறைகள் என பல உட்கட்டுமான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெக்டொப் கிராமங்களுக்கு பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கோழி, ஆடு, மாடு, வளர்ப்பதற்கும், சிறுவியாபாரம், சிறுகைத்தொழில் என்பவற்றைச் செய்வதற்கும் உதவி வழங்கப்படுகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணும் கலந்துரையாடல்கள், தெருக்கூத்துக்கள்ஆகிய நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்நோக்குடனும் சீமெந்துகல்,வேலித்தூண்கள் அறுக்கும் நிலையம் ஒன்றையும் நடத்திவருகின்றது. இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவதில் பெண்கள் அபிவிருத்திஒன்றியம் சிறப்பாக இயங்கிவருகிறது.

Resources

  • நூலக எண்: 6110 பக்கங்கள் 121