படிமம்:Strauf.jpg

ரஊப், சாலித்தம்பி,( 1975.03.02-) அக்கரைப்பற்றை சேர்ந்த ஓர் ஊடகத்துறை ஆளுமையாவார்.இவர் சாலித்தம்பி - சுபைதா உம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார். இவர் தனது இளம் பருவத்திலேயே மிகவும் துடிதுடிப்புடையவராகவும் . எழுத்தற்றல் . பேச்சுத் திறன் , இனிமையான குரல் வளமுள்ளவராகவும் விளங்கினார் 1981 ம் ஆண்டு இவர் தனது ஆரம்பக் கல்வியை கமு / அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் அதனைத் தொடர்ந்து உயர் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் ( தேசிய பாடசாலை ) கற்றார் . இவர் தனது பள்ளிப் பருவத்தில் கலை இலக்கியத்துறைகளில் மிகவும் ஆர்வத்துடனும் , பிரியத்துடனும் பங்குபற்றி பல்வேறு சிறப்பு விருகளையும் பெற்றுள்ளார் . பாடசாலைக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளையும் மற்றும் கலை , கலாசார விழாக்களையும் தொகுத்து வழங்கியதுடன் தனது பிரதேசத்தில் பரீட்சார்த்த ஒலி , ஒளி அலைவரிசைகளையும் ஏற்படுத்தி ஒலி,ஒளி துறைகளில் சிறந்து விளங்கினார் . தனது கலை ஆர்வத்தின் காரணமாக தேசிய ரீதியில் காலடி எடுத்து வைக்கும் முகமாக 1996 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து அதில் தேசிய , வர்த்தக , முஸ்லிம் சேவை . பலாலி - யாழ்சேவை என்பனவற்றில் பகுதி நேர அறிவிப்பாளராகக் கடைமையாற்றினார் . ஒலிபரப்புத் துறையில் முழுமையாக ஈடுபட்டதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தமிழ் பேசும் வானொலி நேயர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவராக திகழ்கின்றார் . தனது கலைப்பயணத்தில் தனக்கென ஒரு தனி இடத்தினைப் பதிப்பதற்காக கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் 1998 இல் தனியார் துறை வானொலியான சூரியன் FM ( பண்பலைவரிசை ) இல் தன்னை இணைத்துக் கொண்டு தனது கலைப்பயணத்தில் சுதந்திரமாகப் பறந்து சூரியன் FM ல் நேற்றயக் காற்று மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை பிரமாதமாகப் படைத்து தனக்கும் சூரியனுக்கும் தேசிய ரீதியில் பெருமை தேடித்தந்தவராவார் . தனது பரினாம வளர்ச்சியில் மற்றுமொரு கட்டமாக சக்தி FM இல் இணைந்து சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் வணக்கம் தாயகம் இதயராகம் முதலிய பல்வேறு நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் தயாரித்தளித்து தமிழ் பேசும் நேயர்களை சக்தியுடன் இணைத்த பெருமையும் இவரையே சாரும் . அதனைத்தொடர்ந்து கெப்பிடல் FM இல் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 22:51, 23 December 2021 | ![]() | 749 × 750 (35 KB) | Shihaf Aqil (talk | contribs) |
- You cannot overwrite this file.
File usage
The following page links to this file: