பகுப்பு:சமர்
From நூலகம்
சமர் இதழானது 1979 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகிறது. இதுவொரு கலை இலக்கிய இதழாகும். இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். இதனை சமர் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டத்தின் மிகவும் காத்திரமான படைப்புக்களையும், பெறுமதி மிக்க எழுத்தாளர்களின் ஆக்கங்களினைத் தாங்கியும், அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சனங்கள் முதலான விடயங்களை உள்ளக்கிய வகையில் இவ்விதழ் பதிப்புக்கண்டுள்ளது. அவ்வகையில் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கலை முன்னெடுப்புக்கள், சமூக அரசியல், விடுதலைப் போராட்டக் குறிப்புக்கள் முதலியன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்பட்டுள்ளன.
Pages in category "சமர்"
The following 8 pages are in this category, out of 8 total.