பகுப்பு:அனலை

From நூலகம்

அனலை இதழ் 2011 ஒக்டோபர் இல் வெளிவர ஆரம்பித்தது.1985 இல் கை எழுத்து சஞ்சிகையாக வெளியாகி இருந்தது இருப்பினும் அச்சில் 2011 இல் வெளியானமை குறிப்பிடக்கூடியது. யாழ்ப்பாண நகரத்திற்கு மேற்கு திசையில் உள்ள அனலை தீவு பிரதேசத்தை மையப்படுத்தி இந்த இதழ் வெளியானது. பிரதேச ரீதியான தகவல்கள், பிரதேச படைப்பாளர்கள், நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த இதழ் வெளியானது. பிரதேச பிரமுகர்களின் வாழ்த்து ஆசிச்செய்திகளுடன் கவிதைகள் சிறு கட்டுரைகள், புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் தகவல், படங்கள், பிரதேச நிகழ்வுகள் பற்றிய குறிப்பு, படங்களுடன் மாணவர்களுக்கு பயன் பட கூடிய கட்டுரைகள், அறிவியல் துணுக்குகள், கட்டுரைகள், வாசிப்பு குறித்த கட்டுரைகள், ஆன்மீக கட்டுரைகள் தங்கி இந்த இதழ் வெளியாகி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது. அனலைதீவு பொது நூலகம் இந்த இதழை வெளியீடு செய்கிறது. முதலாவது இதழின் ஆசிரியராக அனலைதீவு நூலகர் ச. தர்மிளா இதன் ஆசிரியராக விளங்கினார். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் உள்ளடக்க ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிட கூடியது.

Pages in category "அனலை"

The following 4 pages are in this category, out of 4 total.