பகுப்பு:வணிக மஞ்சரி

From நூலகம்

வணிக மஞ்சரி இதழ் 1987 பெப்ரவரியில் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த வணிக அறிவியல் நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக கு.கல்வளை சேயோன் பணியாற்றினார். வணிகச் செய்திகள், பொது வங்கியியல் சட்டங்கள், வர்த்தக ஏற்றுமதி உற்பத்தி மற்றும் வணிகம் சார்ந்த விடயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியானது .