பகுப்பு:தேடல் (பிரான்ஸ்)

From நூலகம்

தேடல் இதழானது வெளிவந்த 1988 காலப்பகுதிகளில் அநேகமாக அரசியல் சார் கட்டுரைகளே பரவாலக வெளிவந்த போது இச்சஞ்சிகையோ இயக்கங்களினதும், அரசினதும் மக்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை இனம்காட்டும் நோக்குடன் வெளிவந்துள்ளது. 1988 தை மாதம் முதல் இதனை பிரான்சில் இயங்கிய மக்கள் கலை இலக்கிய அமைப்பே வெளியிட்டது. இப்பிரதியானது தட்டச்சு மூலம் பதிவு செய்யப்பட்டு போட்டோ கொப்பிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இது அரசியல் தத்துவார்த்தக் கட்டுரைகள், இயக்கங்களின் அராஜகம், வெளிநாடுகளின் போராட்டம் பற்றிய கட்டுரைகள், உலகச்செய்திகள்,பெண்விடுதலை ஆக்கங்கள் முதலான பல்துறை சார் அம்சங்களை தாங்கியதாக இதன் உள்ளடக்கங்கள் காணப்பட்டன.