பகுப்பு:சுவைத்திரள்

From நூலகம்

சுவைதிரள் இதழ் 1993 ஆம் ஆண்டு வெளிவர ஆரம்பித்தது. ஆரம்பகாலத்தில் இருமாத இதழாக வெளிவந்த சஞ்சிகை பின்னர் காலாண்டு இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக 'திக்க வயல் ' தி.தர்மகுலசிங்கம் செயற்பட்டார். இவர் 2012 இல் இறக்கும் வரை இந்த இதழ் வெளி வந்தது. ஈழத்தில் இருந்து நகை சுவைக்கு என வந்த இதழ்களில் முதல்தரமான இதழாக இந்த இதழ் விளங்கியதோடு சிறுவர் முதல் பெரியோர் வரை நகைசுவை ஐ வாசித்து இன்புற செய்த இதழ். நகைசுவையோடு இலக்கிய படைப்புகளையும் தாங்கி வெளிவந்தது. நகை சுவையை இலக்கிய சுவையோடு வெளி படுத்திய இதழ்.