பகுப்பு:எனது ஊர் காரைநகர்
From நூலகம்
ஊர்ப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழானது 2008 தொடக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் இலவச இதழாகும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தனது வெளிவரல் சுழற்சியினைக் கொண்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆரம்பகால செய்தித்தொகுப்பாளராகக் காரைநகரைச் சேர்ந்த கனடா வாழ் தீசன் திரவியநாதன் என்பவர் காணப்பட்டுள்ளார். காரைநகர் மக்களின் செயற்பாடுகள், அக்கிராமம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், ஊர் கோயில்கள் , ஊர் வரலாறுகள், கனடாவில் இடம் பெறும் ஊர் சார்ந்த செயற்பாடுகள் என்பன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன. இன்றும் இது www.karainews.com எனும் வலைத்தள முகவரி மூலம் இணையவழி இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Pages in category "எனது ஊர் காரைநகர்"
The following 8 pages are in this category, out of 8 total.