"நிறுவனம்:முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்= விழுது|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்= விழுது|
+
பெயர்= முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம்|
 
வகை=பெண்கள் நிறுவணம்|
 
வகை=பெண்கள் நிறுவணம்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|

02:54, 2 ஜனவரி 2023 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம்
வகை பெண்கள் நிறுவணம்
நாடு இலங்கை
மாவட்டம் புத்தளம்
ஊர் பாலாவி
முகவரி கொழும்பு வீதி
தொலைபேசி 06522 24657
மின்னஞ்சல்
வலைத்தளம்

நிறுவனத்தின் பெயர் முஸ்லிம் பெண் அபிவிருத்தி நம்பிக்கையகம். அமைவிடம் கொழும்பு வீதி, பாலாவி,புத்தளம் தொலைபேசி இல 06522 24657 இதன் இயக்குனர் யுவேரியா 12 வருடங்களாக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார் பெண்கள் தொடர்பான வேலையாக இருந்தாலும் நிறுவனத்தை பற்றிய கொள்கையில் இருந்த முரண்பாடு காரணமாக தொடர்ந்தும் அங்கு பணி புரிய முடியவில்லை இவரது சேவையைப் பெற்றுக் கொண்டிருந்த புத்தளம் மக்களுக்கு யுவேரியாவின் வழிகாட்டலும் எவையும் கிடைக்கவில்லை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாதர் சங்கம் போன்ற ஒரு அமைப்பை நிறுவி செயற்படத் தொடங்கினார். பெண்கள் சமாதானத்திற்கான அமைப்பு எனும் நிறுவனம் இவரை இந்தியாவிற்கு ஒரு பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பி வைத்தது இந்தியாவிற்கு சென்றவளை அங்கும் முஸ்லிம் பெண்களுக்காக பணிபுரியும் STEP நிறுவனத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது இந் நிறுவனத்தின் செயற்பாடுகளை பார்வையிட்ட யுவேரியா அதுபோன்ற நிறுவனம் ஒன்றை புத்தளத்திலும் நிறுவ வேண்டும் என்ற கனவுடன் நாடு திரும்பினர். தனது கோரிக்கையை சமாதானத்திற்கான அமைப்பிடம் முன்வைத்தார். 1999 ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட நிறுவனம் தனது செயற்பாடுகளின் பிரதிபலிப்பின் மூலம் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு மையம் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு லோ அண்ட் பிரஸ் போன்ற அமைப்புகளின் உதவியை பெற்றதோடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உதவியோடு 2012ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் என தனது நிறுவனத்தை பதிவு செய்து கொண்டார்.


எவ்விதமான நிதி முதலீடுகள் இல்லாதபோதும் யுவேரியா எனும் தனிநபர் ஒருவராலும் புத்தள பெண்களின் ஆதரவாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு என இதனை கூறுவதில் நிகராகாது இனத்துவ பெயரோடு அமைந்திருந்தாலும் இவ்வமைப்பு இனம் சார்ந்து செய்யப்படுவது அல்ல சில அரச சார்பற்ற அமைப்பு பதிவுசெய்து தொழிற்பட முடியாது எனும் தந்திரோபாய அமைவாக இனத்துவ பெயரை கொண்டிருப்பினும் இவர்களது செயல்பாடு அனைத்து மக்களினதும் மனித உரிமை பெண்களின் உரிமை, சிறுவர் உரிமை என்பன சார்ந்தது ஆகும் இந்நிறுவனத்தின் குறிக்கோளாக தமது சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசார உரிமைகளை சமமாக அனுபவிக்கும் ஒரு சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும் சட்டம் மறுபக்கம் உளவியல்சார் தேவைகளை பூர்த்தி செய்தல் இனஉறவை மேம்படுத்தல் சிறந்த வலையமைப்பின் ஊடாக பொருளாதார வளத்தை மற்றும் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சமூக மயமாக்கல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக பெண்களும் சிறுவர்களும் தமது உரிமைகளை அனுபவிக்க கூடிய வகையில் வசதிகள் மற்றும் வாய்ப்புக்கள் இருக்கக் கூடியதுமான ஒரு சூழலை உருவாக்க நாம் சுயமாக இயங்க உதவுதல் மக்கள் முஸ்லிம் சட்டத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான சட்ட உதவியை குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் பெண்கள் பொருளாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளல், பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்கள் எதிராக குரல் கொடுத்தல் போன்றன காணப்படுகின்றன.